/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
/
நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 30, 2025 03:32 AM
ஓமலுார்: விவசாய நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை வீணாக்காமல் முறையாக பயன்படுத்த, வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே அண்ணா சிலை முன், சங்க வட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கண்-டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில் விவசாயிகள் பங்கேற்று, மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணைத்-தலைவர் தங்கவேல், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலர் அரியாக்கவுண்டர் உள்ளிட்ட, 40 பேர் போராட்டத்தில் பங்-கேற்றனர்.