தொடர் மின்வெட்டை கண்டித்து ஏற்காடில் கண்டன ஆர்ப்பாட்டம்
தொடர் மின்வெட்டை கண்டித்து ஏற்காடில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2026 01:51 AM

ஏற்காடு: ஏற்காடு, அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்-களில், சில மாதங்களாகவே அறிவிக்கப்படாத மின்தடை தொடர்-கிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பல-னில்லை. இந்நிலையில் ஏற்காடு வாழ்வுரிமை கூட்டியக்கம் சார்பில், ஒண்டிக்கடை ரவுண்டானாவில் நேற்று கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் தேவபிரகாஷ் தலைமை வகித்தார். அதில் மின்
வாரியத்தை கண்டித்து பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பினர். 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க வலியுறுத்தினர்.
அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., சித்ரா, ஒன்றிய செய-லர்கள், அ.தி.மு.க., அண்ணாதுரை, தி.மு.க., ராஜேந்திரன், மா.கம்யூ., நேரு, தே.மு.தி.க., சார்பில் சுரேஷ்குமார், தி.வி.க., மாவட்ட அமைப்பாளர் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கட்சி-யினர், தொழிற்சங்கத்தினர், மக்கள் பங்கேற்றனர்.
