/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நில அளவீடு செய்யாததால் காத்திருப்பு போராட்டம்
/
நில அளவீடு செய்யாததால் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 12, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், வடக்குகாடு, உப்பு ஓடையில், 1996ல், ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமுதாயத்தினர், 261 பேருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 30 ஆண்டாகியும் நில அளவீடு செய்யாததை கண்டித்து, இ.கம்யூ., சார்பில், ஆத்துார் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட நிர்வாக குழு சடையன் தலைமை வகித்தார். அதில் பலரும், பட்டா கேட்டு கோஷம் எழுப்பினர்.துணை கலெக்டர் ஜெயக்குமார், பேச்சு நடத்தி, ஒரு வாரத்தில் அளவீடு செய்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனால் மாவட்ட செயலர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

