ADDED : ஜன 09, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே நரசிங்கபுரம் வழியே வசிஷ்ட நதிக்கு செல்லும் சிற்றோடை குறுக்கே, 7 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட மேம்-பாலம் கட்டப்பட்டது. அதன் மேற்புற பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் தெரிகின்றன. கடந்த மாதம், சேதம-டைந்த இடத்தில் ஜல்லி கலவை போட்டு சரிசெய்தனர். அதுவும் பெயர்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில் பாலத்தை சரிசெய்யக்கோரியும், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சாலையோர வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம், ஆட்டோ டிரைவர் சின்-னையன் உள்பட, 3 பேர், பாலத்தின் மீது வேட்டியை போர்த்தி, மாலைகள் போட்டு, பாலம் இறந்ததாக கூறி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார், பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.

