/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அம்பேத்கர் சிலை திறக்க ஆர்ப்பாட்டம்
/
அம்பேத்கர் சிலை திறக்க ஆர்ப்பாட்டம்
ADDED : மே 16, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லிகெங்கவல்லி அருகே ஒதியத்துார் பஸ் ஸ்டாப்பில், 4 ஆண்டுக்கு முன், ஒரு தரப்பினர் அம்பேத்கர் சிலையை வைத்தனர். இச்சிலையை திறக்க, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வருவாய்த்துறை, போலீசார், அச்சிலையை மூடிவைத்தனர். தொடர்ந்து சிலை திறக்க அனுமதிக்கவில்லை.
இதனால் நேற்று, மக்கள் தேசம் கட்சி சார்பில், கெங்கவல்லி அண்ணாதுரை சிலை முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அதில் சட்டத்தை வகுத்து கொடுத்த அம்பேத்கர் சிலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர். திரளானோர் பங்கேற்றனர்.