/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலித் மீதான தாக்குதலை தடுக்க ஆர்ப்பாட்டம்
/
தலித் மீதான தாக்குதலை தடுக்க ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் சேலம், கோட்டை ஸ்டேட் பேங்க் முன், இ.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் கந்தன் தலைமை வகித்தார். அதில் நாடு முழுதும் தலித், பழங்குடியினர், பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதை மத்திய அரசு உடனே தடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். மாவட்ட துணை செயலர் ராமன், மாநில குழு உறுப்பினர் தினேஷ், மாவட்ட செயலர்கள், விவசாய சங்கம் செல்வராஜ், ஏ.ஐ.டி.யு.சி., சம்பத், ஏ.ஐ.ஒய்.எப்., ரமேஷ், மாதர் சங்கம் வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

