/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வக்கீல்கள் மீது பொய் வழக்கு ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
/
வக்கீல்கள் மீது பொய் வழக்கு ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
வக்கீல்கள் மீது பொய் வழக்கு ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
வக்கீல்கள் மீது பொய் வழக்கு ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 29, 2024 01:32 AM
வக்கீல்கள் மீது பொய் வழக்கு
ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
சேலம், நவ. 29-------
தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்ற வளாகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. துணை தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். அதில், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல்லை சேர்ந்த வக்கீல்கள் மீது, போலீஸ் துறையால் போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பொய் வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும், மத்திய, மாநில அரசு கள், பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தினர். வக்கீல்கள் கூட்டமைப்பினர் பலர் பங்கேற்றனர்.
பாதுகாப்பு சட்டம்
ஓசூரில் வக்கீல் கண்ணன் தாக்கப்பட்டதை கண்டித்து, ஓமலுார் வக்கீல் சங்கம் சார்பில், அங்குள் நீதிமன்றம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். அதில், வக்கீல் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். செயலர் குருநாதன், முன்னாள் தலைவர் சிவராமன், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.