ADDED : டிச 19, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர், 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தில், கட்டட பரா-மரிப்பு பிரிவில், 112 பெண்கள் உள்பட, 130 ஊழியர்கள், ஒப்பந்த நிறுவனங்களின் கீழ், 12 ஆண்டுகளாக வேலை செய்தனர். பிடித்தம் போக, 480 ரூபாய் தின ஊதியம் பெற்ற அவர்களை, கடந்த, 1 முதல், ஒப்பந்த நிறுவனத்தினர், வேலையில் இருந்து நிறுத்தினர்.
இதனால் பாதிக்கப்பட்ட, 50 பெண்கள் உள்பட, 60 ஊழியர்கள் நேற்று, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில தலைவர் பகுத்தறிவன் தலைமையில், மேட்டூர் அனல்மின் நிலையம் முன் அமர்ந்து, மீண்டும் வேலை கேட்டு போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, அனல்மின் நிலைய பொறி-யாளர்கள், ஒப்பந்த நிறுவனத்தினர் பேச்சு நடத்தி முடிவு செய்யப்-படும் என, தெரிவித்துள்ளனர்.