/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோடை காலத்தையொட்டி விலங்குகளுக்கு பழம் வழங்கல்
/
கோடை காலத்தையொட்டி விலங்குகளுக்கு பழம் வழங்கல்
ADDED : மார் 24, 2025 06:59 AM
சேலம்: சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படுகிறது. அங்கு பராமரிக்கப்படும் விலங்கினங்களுக்கு, கோடை காலத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பூங்காவில், 21 இனங்களை சேர்ந்த ஊர்வன, பறவைகள், பாலுாட்டி இனங்கள் என, 260க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. மயில்களுக்கு தண்ணீர் தெளிப்பான் மூலம் சுழன்றபடி நீர் பாய்ச்சி அடித்தல், புள்ளிமான், கடமான்கள் ஓய்வெடுக்கும் இடங்களில் மேற்கூரை தகரச்சீட்டு முறையில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கோடை காலத்தால், தகரச்சீட்டு எடுக்கப்பட்டு புற்களால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. குரங்கு உள்ளிட்ட விலங்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடை மருத்துவர்கள் ஆலோசனைப்படி, விலங்கினங்கள் கண்காணிக்கப்படுகின்றன. சுற்றுலா பயணியர், பிளாஸ்டிக் கவரில் உணவு கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.