/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்; துணை முதல்வர் 20ல் வருகை
/
சேலத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்; துணை முதல்வர் 20ல் வருகை
சேலத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்; துணை முதல்வர் 20ல் வருகை
சேலத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்; துணை முதல்வர் 20ல் வருகை
ADDED : அக் 18, 2024 07:22 AM
சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நேரு கலையரங்கில், வரும் 20ல் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்வதற்காக, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று மதியம் ஆய்வு பணி மேற்கொண்டார். கலையரங்கில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங், ஆர்.டி.ஓ., அபிநயா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.