/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இறந்த இ.எஸ்.ஐ., காப்பீட்டாளரின் தாய்க்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்கல்

ADDED : மே 31, 2025 06:20 AM
சேலம்: சேலத்தில் உள்ள, அன்னபூர்ணா ஓட்டலில் பணியாற்றி வந்தவர், சங்கர் வெங்கடாசலம். இவர், தொழிலாளர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, அவரது ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை, மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டது. 2024 ஆக., 1ல், சங்கர் வெங்கடாசலம், மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இதனால் அவரை சார்ந்தோருக்கு வாழ்நாள் ஓய்வூதியமாக, அவரது விதவை தாய்க்கு, 2,046 ரூபாய், மாத ஓய்வூதியம் வழங்க, சேலம் இ.எஸ்.ஐ., துணை மண்டல இணை இயக்குனர் சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதன்படி சேலம் இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் ஜெனோவா, சமீபத்தில் ஓய்வூதிய உத்தரவு வழங்க, அதை, இறந்த ஊழியரின் விதவை தாய் பெற்றுக்கொண்டார். இந்த உத்தரவு, அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் ஜெய்பாரத் முன்னிலையில் வழங்கப்பட்டது.