ADDED : டிச 22, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலாவதி வாகனம்26ல் பொது ஏலம்
சேலம், டிச. 22-
சேலம் மாவட்ட போலீசில் பயன்படுத்தப்பட்டு காலாவதியான, 4 சக்கர வாகனங்கள் - 9, இரு சக்கர வாகனங்கள் - 7 என, 16 வாகனங்கள், வரும், 26ல் பொது ஏலத்தில் விற்கப்பட உள்ளன. சேலம், குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில், அன்று காலை, 10:00 மணிக்கு ஏலம் நடக்கும்.
நாளை முதல், ஏல வாகனங்களை பார்வையிடலாம். விரும்புவோர், 4 சக்கர வாகனத்துக்கு, 5,000 ரூபாய், இருசக்கர வாகனத்துக்கு, 1,000 ரூபாய், முன்பணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். இதுதொடர்பாக விபரம் பெற, 94981 - 67389 என்ற எண்ணில் அழைக்கலாம்.