ADDED : டிச 14, 2024 03:13 AM
சேலம்: சேலம் டி.ஆர்.ஓ., மேனகா அறிக்கை: சேலம் வட்டத்தில் இயங்-கிய லலிதாம்பிகை ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அசையும் சொத்துகள், சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 115ல், வரும், 26 காலை, 11:00 மணிக்கு பொது ஏலம் விடப்-படும். ஏல நிபந்தனைகள், கலெக்டர் அலுவலகம், 14 தாலுகா அலுவலக விளம்பர பலகைககளில் ஒட்டப்பட்டுள்ளன. நிபந்த-னைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள-வர்கள் நேரில் வரலாம். அசையும் சொத்துகளை, '340, பஞ்ச-வர்ணம் நகர், அழகாபுரம், சேலம்' எனும் முகவரியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஏல தேதிக்கு முன் பார்வையிடலாம்.
அதேபோல், 'மேக்ஸ் குரூப் ஆப் டெக்னாலஜி' நிறுவனத்தின் இரு, நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. பொரு-ளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அலுவலகம், சேலம் ஸ்வர்ணபுரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில் நிறுத்தப்பட்-டுள்ள வாகனங்களை, ஏல தேதிக்கு முன் பார்வையிடலாம்.