/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
/
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 11, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், கல்லாநத்தம் ஊராட்சி, 5வது வார்டில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லை;
சாக்கடைகளை பல மாதங்களாக துார்வாரவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள், நேற்று சாலையில் கற்களை வைத்து, மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் ஊரக போலீசார், ஊரக வளர்ச்சித்துறையினர், பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர்.