/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முருகன் கோவிலில் பூஜை புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு
/
முருகன் கோவிலில் பூஜை புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு
முருகன் கோவிலில் பூஜை புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு
முருகன் கோவிலில் பூஜை புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு
ADDED : ஏப் 29, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி:
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் புதிதாக கட்டப்பட்டு, 18 சித்தர்கள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
நாயகம் சித்தர் தலைமையில் நடந்த திருப்பணிகள் முடிவுற்று, பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு கடந்த, 4ல் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து கோவிலில் மண்டல பூஜை கடந்த, 5ல் தொடங்கி, இறுதி நாளான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.
அவர் பாலதண்டாயுதபாணியை தரிசனம் செய்தார். பின்னர், அங்கிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குள்ளம்பட்டியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.