ADDED : ஜூன் 22, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் உள்ள ஜருகுமலை, கடல் மட்டத்தில் இருந்து, 2,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு மேலுார், கீழுர் கிராமங்களில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், மேலுார், கீழுரில் கதிரடிக்கும் களம் அமைக்க, தலா, 10.50 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டு, பூமி பூஜை நேற்று நடந்தது.
பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், தனி அலுவலர் கார்த்தி, பணியை தொடங்கிவைத்தனர். தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், பொறியாளர்கள், பங்கேற்றனர். அதேபோல் மேலுார் அங்கன்வாடி மையம் முதல் கீழுர் வரை, 8 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை பணி தொடங்கி
வைக்கப்பட்டது.