/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1,500 கிலோ பூக்களால் சுகவனேஸ்வரருக்கு புஷ்பாஞ்சலி
/
1,500 கிலோ பூக்களால் சுகவனேஸ்வரருக்கு புஷ்பாஞ்சலி
ADDED : ஜன 06, 2025 03:04 AM
சேலம்: மார்கழியையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், சேலம் பிரதோஷ வழிபாடு நண்பர் குழு சார்பில், 3ம் ஆண்டாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலையில் சுகவ-னேஸ்வரருக்கு இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்-வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, 108 லிட்டர் பாலால் அபி ேஷகம் செய்து பட்-டாடை உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்-யப்பட்டது.இதையடுத்து, 1,500 கிலோ வண்ண வாசனை மலர்கள், சீர்வ-ரிசை தட்டுகளுடன், அம்மையப்பர், யானை வாகனத்தில் அமர்த்-தப்பட்டு, திரளான பக்தர்கள், ராஜகணபதி கோவிலில் இருந்து சின்னக்கடை வீதி வழியே ஊர்வலமாக சுகவனேஸ்வரர் கோவிலை அடைந்தனர். அங்கு சிவாச்சாரியார், வேதங்கள் முழங்க, சுகவனேஸ்வரருக்கு புஷ்பாஞ்சலி வைபவம் நடத்தி, அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்-னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை குழுவின் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.