நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: கொளத்துார், நவப்பட்டி ஊராட்சி கூராண்டிபுதுாரை சேர்ந்தவர் இன்னாசி அம்மாள், 70. இவரது கரும்பு தோட்டத்தில் நேற்று காலை, 7 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது.
அவர் தகவல்படி நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மேட்டூர் தீயணைப்பு குழுவினர், மதியம் சம்பவ இடத்துக்கு வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின் சாக்கில் கட்டி மேட்டூர் வனத்துறை ஊழியரிடம் ஒப்படைத்தனர்.