/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை பூங்காவில் மலைப்பாம்பு உயிரிழப்பு
/
மேட்டூர் அணை பூங்காவில் மலைப்பாம்பு உயிரிழப்பு
ADDED : நவ 12, 2024 01:39 AM
மேட்டூர் அணை பூங்காவில்
மலைப்பாம்பு உயிரிழப்பு
மேட்டூர், நவ. 12-
மேட்டூர் அணை பூங்காவில், 20 வயது மலைப்பாம்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
மேட்டூர் அணை பூங்காவில், இரு பாம்பு பண்ணைகள் உள்ளன. இதில், ஒரு பண்ணையில் ஒரு ஆண், ஒரு பெண் என ஜோடி மலைப்பாம்பு
கள் உள்ளன. மற்றொரு பண்ணையில் நாகப்பாம்பு, சாரைபாம்புகள் உள்ளன. இதில், 20 வயது நிரம்பிய ஒரு ஆண் மலைப்பாம்பு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதித்த நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை ஆண் மலைப்பாம்பு உயிழந்தது.மேட்டூர் வனத்துறை அலுவலர்கள் முன்னிலையில், கால்நடை மருத்துவர் பாம்பை பரிசோதனை செய்தார், சோதனைக்கு பின்பு நேற்று மாலை பள்ளம் தோண்டி பாம்பு புதைக்கப்பட்டது.

