ADDED : மார் 31, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சங்ககிரி வனப்பகுதியில், வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் சோதனை நடத்தியபோது, 10 பேர், முயலை வேட்டையாடி அதன் கறியை வைத்திருப்பது தெரிந்தது.
விசாரணையில், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த, கேசவன், குபேரன், சீனிவாசன், அன்பழகன், சதீஷ், சவுந்தர் குமார், அன்பரசன், வெங்கடேஷ், பூபாலன் என தெரிந்தது. அவர்களுக்கு தலா, 40,000 வீதம், 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.அதேபோல் சேலம், குரும்பப்பட்டி காப்புக்காடு வனப்பகுதியில், மது அருந்திய, அழகாபுரத்தை சேர்ந்த ஏழுமலை, 59, பள்ளப்-பட்டி சேகர், 60, ஆகியோருக்கு, தலா, 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.