/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
450 வளர்ப்பு நாய்களுக்குவெறிநோய் தடுப்பூசி
/
450 வளர்ப்பு நாய்களுக்குவெறிநோய் தடுப்பூசி
ADDED : டிச 22, 2024 12:52 AM
ஆத்துார், டிச.
22-
ஆத்துார் கோட்டத்தில் உள்ள ஆத்துார், மஞ்சினி, ஊனத்துார், தம்மம்பட்டி, ஏத்தாப்பூர் பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தன்னார்வ அமைப்பு இணைந்து வெறிநோய் தடுப்பூசி முகாமை நேற்று நடத்தின. இந்த முகாமை, சேலம் மண்டல இணை இயக்குனர் பாரதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 450க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் தடுப்பூசியின் முக்கியத்துவம், நாய் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குனர் பாபு, கால்நடை பன்முக மருத்துவர் பரணிதரன், ஆத்துார் கோட்ட உதவி இயக்குனர் முருகவேள் உள்பட பலர் பங்கேற்றனர்.