ADDED : ஆக 22, 2024 03:50 AM
சேலம்: சேலம், முதல் அக்ரஹாரம் வியாசராஜ மடத்தில், ராகவேந்திரர் சுவாமிகளின், 353ம் ஆண்டு ஆராதனை ம ேஹாத்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று ராகவேந்திரருக்கு, 108 லிட்டர் பால், பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் செய்யப்பட்டது. அஷ்டோத்ரம் உள்ளிட்ட பல்வேறு ேஹாமங்கள் செய்யப்பட்டு பூர்ணாஹூதி நடந்தது.
தொடர்ந்து ராகவேந்திரர், நரசிம்மர், ஆஞ்சநேயர், உள்ளிட்ட ஸ்வாமிகளுக்கு தங்க கவசம் சாத்துபடி வைபவம் நடந்தது. பின் ஆச்சாரியார்கள் வேதங்கள் முழங்க லட்சார்ச்சனை நடந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சேலம் இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் குழு சார்பில், கர்நாடக இன்னிசை கச்சேரி நடந்தது. வைபவ ஏற்பாட்டை, மட மேலாளர் பிரசன்னன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.