/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 18, 2025 05:35 AM
தலைவாசல்: தலைவாசல், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 2024 - -25ம் கல்வி ஆண்டின், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம், ஆத்துார் கல்வி மாவட்ட அளவில் மற்றும் தலைவாசல் தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். பள்ளி அளவில், 10ம் வகுப்பில் முதலிடத்தை, மாணவர்கள் கனிக்ஷா, 497, தரணீஷ், 497, ஆகியோர் பெற்றனர். அஞ்சலி, 496 மதிப்பெண் பெற்று, 2ம் இடம் பிடித்தார். மாணவர்கள் ஸ்ரீவாசன், ஸ்ரீராம், சந்தோஷ் ஆகியோர், 494 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடத்தை பிடித்தனர்.
இவர்களை, பள்ளி தலைவர் அருள்குமார், செயலர் செல்வராஜூ, பொருளாளர் பிரபா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். கல்வி ஆலோசகர்கள் லஷ்மி நாராயணன், இளையப்பன், கூட்ரோடு பழனி வேல், கல்வி குழு இயக்குனர் ராஜா மற்றும் தங்கவேல், ராஜேஸ்வரி, இயக்குனர்கள், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், 51 மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். 10-ம் வகுப்பு படித்த, 332 மாணவர்களில், 490 மதிப்பெண்களுக்கு மேல், 15 மாணவர்கள், 480க்கு மேல், 33 பேர், 470க்கு மேல், 54 பேர், 460க்கு மேல், 77 பேர், 450க்கு மேல், 105 பேர், 400க்கு மேல், 219 மாணவர்கள் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவர்கள், வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர், பாராட்டு தெரிவித்தனர்.