ADDED : மார் 11, 2024 02:16 AM
மல்லுார்:மல்லுார்
அருகே நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் சூர்யா, 25. பெயின்ட் அடிக்கும்
தொழில் செய்கிறார். அவருக்கு, 3 அண்ணன், ஒரு தம்பி உள்ளனர். அதில் ஒரு
அண்ணன் விக்னேஷ், 28, சேலம் டவுனை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து ஊர்
சுற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ஒரு பைக்கில்
வந்த, 3 பேர், சூர்யா வீட்டின் முன் நின்றனர். 'உன் அண்ணன் விக்னேஷ்
எங்கே' என கேட்டு, சூர்யாவை கத்தியால் வெட்டினர். அவரது நண்பர் சங்கர்,
பாட்டி ராசாத்தி ஆகியோரை கட்டையால் தாக்கினர். அங்கு
நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் கண்ணாடியை உடைத்தனர்.
மேலும்
அந்த வழியே நடந்து சென்ற தங்கேஸ்வரன் என்பவரின் தலையில் கத்தியால்
வெட்டினர். பின் மூவரும் பைக்கில் தப்பினர். காயம் அடைந்த, 4 பேரும்,
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மல்லுார்
போலீசார் விசாரித்து, சேலம், கிச்சிப்பாளையம் கார்த்தி, 26, அவரது
தம்பி கவுதம், 25, பொன்னம்மாபேட்டை தமிழரசன், 19, ஆகியோரை நேற்று
கைது செய்தனர்.

