/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதராக மாறிய ரயில்வே ஸ்டேஷன்; தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
புதராக மாறிய ரயில்வே ஸ்டேஷன்; தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
புதராக மாறிய ரயில்வே ஸ்டேஷன்; தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
புதராக மாறிய ரயில்வே ஸ்டேஷன்; தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 20, 2025 07:16 AM
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மற்றும் லீபஜார் பகுதிகள், மொத்த வணிகத்தின் முக்கிய பகுதியாக உள்ளன. அங்கு மளிகை பொருட்கள் முதல், பிரபல நிறுவன தயாரிப்பு பொருட்கள் வரை கிடைப்பதால், சிறு வியாபாரிகள், இங்கு வந்து வாங்கிச்செல்கின்றனர். குறிப்பாக ஆத்துார், தலைவாசல், சின்னசேலம் பகுதிகளில் இருந்து, செவ்வாய்ப்பேட்டைக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச்செல்ல, தினமும் ஏராளமானோர், சத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, செவ்வாய்ப்பேட்டைக்கு செல்கின்றனர்.
அதேபோல் செவ்வாய்பேட்டையில் கூலி வேலைக்கும் பலர், ரயில் மூலம் சத்திரம் வந்து செல்கின்றனர். ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில், ஆள் உயரத்துக்கு செடி, கொடிகள் வளர்ந்து, புதராக மாறியுள்ளது. குறிப்பாக விஷ ஜந்துக்களின் கூடாரமாகவே உள்ளது.மேலும் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர், கழிவுநீரால் கொசுக்களின் உற்பத்தி மையமாகவும் மாறிவிட்டது. இதனால் ஸ்டேஷன் வந்து செல்லும் பயணியர், ரயில்களில் இருந்து சரக்கு ஏற்றி, இறக்கும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அங்குள்ள புதர், கழிவுநீரை உடனே அகற்ற, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பயணியர் வலியுறுத்தினர்.