/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு, ஆத்துாரில் நேற்று இரவும் மழை
/
ஏற்காடு, ஆத்துாரில் நேற்று இரவும் மழை
ADDED : டிச 03, 2024 06:58 AM
ஏற்காடு: ஏற்காட்டில், கடந்த நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வரு-கிறது. நேற்று மதியம்
2:00 மணிக்கு சற்று ஓய்ந்திருந்த மழை இரவு, 7:20 மணிக்கு ஏற்காடு, சுற்று வட்டார
பகுதியில் மீண்டும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.மூன்று நாட்களாக ஏற்காடு முழுவதும் மின்சாரம் இல்லாத நிலையில், நேற்று மாலை
தான் மின்சாரம் வந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால், மீண்டும் மின் தடை ஏற்பட்டு
ஏற்காடு முழுவதும் இருளில் மூழ்கியது.*ஆத்துார், நரசிங்கபுரம் பகுதிகளில் நேற்று மாலை, 6:00 மணி வரை மழை இல்லாமல்
இருந்தது. இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.மழையின் காரணமாக, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.