/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தென்னை பண்ணையில் மழைமானி பொருத்தம்
/
தென்னை பண்ணையில் மழைமானி பொருத்தம்
ADDED : டிச 28, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டையில், அரசு தென்னை நாற்றுப்பண்ணை, 24.17 ஏக்கரில் உள்ளது. அங்கு நெட்டை, நெட்டை குட்டை ரகம், தென்னை நாற்றுகள் உற்பத்தி செய்யப்ப-டுகின்றன.
அருகே உள்ள அரசு விதைப்பண்ணையில், கோவை வேளாண் கல்லுாரி சார்பில் தானியங்கி மழைமானி, வெப்பமானி அமைக்-கப்பட்டு, ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்நி-லையில் தோட்டக்கலைத்துறையில் செயல்படும், தென்னை நாற்று பண்ணையிலும், மழைமானி, டிஜிட்டல் வெப்பமானி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பண்ணை அதிகாரி ஸ்ரீவித்யா கூறுகையில், ''பருவ நிலை மாறுபாட்டை கண்டறிந்து, அதன் சூழலுக்கேற்ப தென்னை நாற்றுகள் உற்பத்தி முறையாக கண்காணிக்கப்படும்,'' என்றார்.

