ADDED : அக் 12, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், தலைவாசல்
பகுதிகளில் மழை
ஆத்துார், அக். 12-
ஆத்துார் சுற்று வட்டார பகுதியில், கன மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மதியம், 3:00 மணியளவில், மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் தலைவாசல், ஆறகளூர், பெரியேரி, காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான் சுற்றுவட்டார பகுதிகளில், கன மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

