ADDED : ஜூலை 13, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூரில் கடந்த மாதம், 22ல், 14.6 மி.மீ., மழை பெய்தது. அதன் பின் மழை பெய்யாத நிலையில், நேற்று முன்தினம் மதியம் மழை பெய்தது.
குறிப்பாக, 18 நாட்களுக்கு பின் மேட்டூர் சுற்றுப்பகுதியில் மழை பெய்து, 14.4 மி.மீ., ஆக பதிவானது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து, சாகுபடி செய்த நிலங்களில் ஈரப்பதம் அதிகரித்தது. மழையால் சுற்றுப்பகுதி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.