/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனமரத்துப்பட்டியில் 10 நாட்களுக்கு பின் மழை
/
பனமரத்துப்பட்டியில் 10 நாட்களுக்கு பின் மழை
ADDED : ஜூலை 14, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 10 நாட்களாக மழை இல்லை. அதேநேரம், ௩ நாட்களாக வெயில் கொளுத்தியது. ஆனால் நேற்று இரவு, 7:00 மணிக்கு காற்று, மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து மின் தடை ஏற்பட்டது.
மழை ஓய்ந்ததால், ஒரு மணி நேரத்துக்கு பின் மின் வினியோகம் தொடங்கியது. ஆனால் இரவில் தொடர்ந்து மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.அதேபோல் வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்-டணம், பெத்தநாயக்
கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.