/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்டம் முழுதும் மழை மேட்டூரில் மட்டும் இல்லை
/
மாவட்டம் முழுதும் மழை மேட்டூரில் மட்டும் இல்லை
ADDED : ஜூலை 23, 2025 01:27 AM
மேட்டூர், சேலம் வானிலை ஆய்வு மையம் சார்பில், மாவட்டத்தில், 16 இடங்களில் தென்மேற்கு பருவ மழையை பதிவு செய்யும் மையங்கள் உள்ளன. அதன்படி நேற்று முன்தினம் ஏற்காட்டில், 21 மி.மீ., டேனிஷ்பேட்டை, 18, வாழப்பாடி, 16, ஏத்தாப்பூர், 14, ஓமலுார், 10.5, ஆத்துார், 9, நத்தக்கரை, ஆணைமடுவு தலா, 7, இடைப்பாடி, 5.4, தம்மம்பட்டி, 5, கெங்கவல்லி, கரியகோவில் தலா,
4, சேலம், 3.2, சங்ககிரி, 3, வீரகனுார், 2, என, மழை பதிவானது. இதன்மூலம் சேலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. அதேநேரம் மேட்டூர் வட்டத்தில் மட்டும், வானம் மேகமூட்டமாக காணப்பட்ட போதும் மழை பெய்யாதது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.