/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனிமூட்டத்துடன் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
பனிமூட்டத்துடன் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : நவ 14, 2024 07:41 AM
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு, பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை முதல், ஏற்காடு முழுதும் அதிகளவில் பனி மூட்டம் சூழ்ந்தது. சாரல் மழையும் பெய்தது.
இதே நிலை மதியம் வரை தொடர்ந்தது. மாலையில் பனிமூட்டம் விலகி லேசாக வெயில் தென்பட்டது. பின், மீண்டும் ஏற்காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது.
இதனால் சற்று துாரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றனர். மேலும் நேற்று காலை முதல், ஏற்காடு முழுதும் கடுங்குளிர் நிலவியது. இதனால்
கூலி வேலைக்கு செல்லும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கினர்.