/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையால் விளைச்சல் பாதிப்பு தக்காளி கிலோ ரூ.80 ஆக உயர்வு
/
மழையால் விளைச்சல் பாதிப்பு தக்காளி கிலோ ரூ.80 ஆக உயர்வு
மழையால் விளைச்சல் பாதிப்பு தக்காளி கிலோ ரூ.80 ஆக உயர்வு
மழையால் விளைச்சல் பாதிப்பு தக்காளி கிலோ ரூ.80 ஆக உயர்வு
ADDED : டிச 05, 2024 07:54 AM
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பரவலாக நடவு செய்திருந்தனர்.
அங்கு விளைவிக்கப்படும் தக்காளியை, வாழப்பாடி உழவர் சந்தை, அங்குள்ள தனியார் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று
விற்கின்றனர்.வாழப்பாடி உழவர் சந்தையில் கடந்த நவ., 29ல் ஒரு கிலோ தக்காளி, 25 முதல், 40 ரூபாய் வரை விற்றது. ஆனால்
நேற்று, ஒரு கிலோ தக்காளி, 70 முதல், 80 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல் தனியார் மார்க்கெட்டில் ஒரு
வாரத்துக்கு முன், 25 கிலோ பெட்டி தக்காளி, 1,000 முதல், 1,100 ரூபாய் வரை விற்றது, நேற்று, 2,000 முதல், 2,200 ரூபாய்
வரை விலைபோனது. சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த கனமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை
உயர்ந்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.