/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைநீர் வடிகால், பாலம் ஆத்துார் எம்.எல்.ஏ., திறப்பு
/
மழைநீர் வடிகால், பாலம் ஆத்துார் எம்.எல்.ஏ., திறப்பு
மழைநீர் வடிகால், பாலம் ஆத்துார் எம்.எல்.ஏ., திறப்பு
மழைநீர் வடிகால், பாலம் ஆத்துார் எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : ஜூலை 05, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார் நகராட்சி, 32வது வார்டு, வ.உ.சி., நகரில் உள்ள ஓடையில், பாலம், மழைநீர் வடிகால் வசதியின்றி மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து, கடந்த ஜனவரியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரனிடம் மனு வழங்கினர்.
தொடர்ந்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதி, 12.50 லட்சம் ரூபாயில், மழைநீர் வடிகால், பாலம் கட்டப்பட்டது. இவற்றை நேற்று, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நகர செயலர் மோகன் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.