ADDED : மே 22, 2025 01:36 AM
சேலம், முன்னாள் பிரதமர் ராஜிவின், 34வது நினைவு தினம், சேலம் மாநகர் மாவட்ட காங்., சார்பில், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முள்ளுவாடி கேட் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து, தலைவர் பாஸ்கர் தலைமையில், ராஜிவ் படத்தை ஏந்தி மவுன ஊர்வலமாக, அவரது சிலை வரை சென்றனர். தொடர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநகர பொருளாளர் ராஜ், கணபதி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் சுப்ரமணியம், துணை மேயர் சாரதாதேவி, மாநகர துணை தலைவர்கள், மண்டல தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் தாரமங்கலம் நகர காங்., சார்பில், தலைவர் சண்முகம் தலைமையில் பஸ் ஸ்டாண்ட் அருகே காந்தி சிலை
பகுதியில் ராஜிவ் படத்துக்கு மரியாதை செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன், வட்டார தலைவர் ரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் சேலம் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி சங்ககிரி நகர, வட்டார காங்., கமிட்டி சார்பில் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் எதிரே ராஜிவ் படத்துக்கு மாவட்ட கமிட்டி தலைவர் ஜெய்குமார் தலைமையில் கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நகர தலைவர் ரவி, வட்டார தலைவர் குமார், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.