ADDED : மார் 31, 2025 02:18 AM
சேலம்: சேலம் விநாயகா மிஷன் பல்கலை, விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்-படி, சேலம் 5டி.என்., ஏ.ஐ.ஆர்., எஸ்.க்யூ.என்.,(டெக்) அமைப்-புடன் இணைந்து, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடத்தியது.
கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சேலம் மாந-கர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்ட வடக்கு பிரிவு போலீஸ் இணை கமிஷனர் சிவ-ராமன், அமைப்பின் கட்டளை அதிகாரி
முருகானந்தம், சேலம் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பின் ஆலோசகர் அஸ்வந்த் வெற்றிவேல், மாவட்ட சுகா-தார அலுவலக அலுவலர் சக்திவேல் பங்கேற்றனர்.
பேரணி, 5 ரோட்டில் நிறைவுற்றது. அதில் துறை மாணவர்கள், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர். மேலும் தெருக்கூத்து நாடகம் மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. ஏற்பாட்டை, கல்லுாரி நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்
தனசேகர், தேசிய மாணவ படை ஒருங்கிணைப்பாளர் தங்க குமரன், மோகன், அமைப்பின் கட்டளை
அதிகாரி முருகானந்தம் செய்திருந்தனர்.