/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை ராமர் கோவில் பிரதிஷ்டை: சேலத்தில் நேரடி ஒளிபரப்பு
/
நாளை ராமர் கோவில் பிரதிஷ்டை: சேலத்தில் நேரடி ஒளிபரப்பு
நாளை ராமர் கோவில் பிரதிஷ்டை: சேலத்தில் நேரடி ஒளிபரப்பு
நாளை ராமர் கோவில் பிரதிஷ்டை: சேலத்தில் நேரடி ஒளிபரப்பு
ADDED : ஜன 21, 2024 12:11 PM
சேலம்: அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா நாளை மதியம், 12:00 முதல், 2:00 மணிக்குள் நடக்க உள்ளது. இது நேரலையாக, ஆண்டாள் திருப்பாவை நண்பர் குழு சார்பில், சேலம் பட்டைக்கோவில் வசந்த மண்டபத்தில், திரையில் ஒளிபரப்பப்படவுள்ளது. தொடர்ந்து அன்று மதியம், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.
மாலையில் பட்டைக்கோவில் வரதராஜர், அம்மாபேட்டை சவுந்தரராஜர், அசோக் நகர் லட்சுமி வெங்கடேச பெருமாள், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர், கிருஷ்ணா நகர் சீதா ராமச்சந்திர மூர்த்தி, எருமாபாளையம் ராமானுஜர் மணிமண்டபம், பட்டைக்கோவில் கிருஷ்ணன் ஆகிய கோவில்களில் இருந்து பெருமாள் சுவாமிகள், வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவுள்ளனர்.
ஸ்ரீவாரி பக்த சபா சார்பில், நாளை, ராமர் பட்டாபிேஷக கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பட்டைக்கோவில் முதல் அம்மாபேட்டை ராஜகணபதி தெரு வரை முக்கிய வீதிகளில் பாகவதர்களின் பஜனை, கோலாட்டங்களுடன் ஊர்வலம் நடக்க உள்ளது.
அதேபோல் சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், சேலம் பட்டைக்கோவில் அருகே முராரி வரதய்யர் தெருவில் நாளை, பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அத்துடன், 11 கோமாதாக்களுக்கு சிறப்பு யாக பூஜை, பக்தி பாடல்கள், நாம சங்கீர்த்தனம், ஸ்ரீராம நாம ஜெபம் ஆகியவை நடக்க உள்ளது. மேலும் சேலம், அண்ணா தெரு, ஸ்ரீஹயக்ரீவர் நண்பர் குழு சார்பில் நாளை அலங்கார பந்தலில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமிகள், பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட உள்ளது.

