ADDED : மே 03, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் பட்டைக்கோவில் அருகே புட்டாநாயக்கர் தெருவில் உள்ள ராமதாச ஏகாதசி மடம் சார்பில், ராமநவமி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அதில் ஸ்ரீகிருஷ்ண பிருந்தாவன கோலாட்ட கலைக்குழுவை சேர்ந்தவர்கள், கோமாளி போன்று வேடம் அணிந்தும், கிருஷ்ணர், ராமர் போன்று, ராமாயண கதாபாத்திரங்களை போல் வேடம் அணிந்தும், சவுராஷ்டிரா மொழியில் பாட்டு வடிவில் ராமாயண காவியத்தை பாடி ஆடி நடித்து காட்டினர். பெண்கள், சவுராஷ்டிரா மொழி பஜனை பாடல்களுக்கு கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். விழா நிறைவாக கோலாட்டத்தை காண வந்தவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.