ADDED : ஜூலை 26, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி:பா.ம.க.,
நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா, இடைப்பாடியில் நேற்று
கொண்டாடப்பட்டது. நகர செயலர் சண்முகம் தலைமை வகித்தார்.
அதில் சேலம்
தெற்கு மாவட்ட செயலர் செல்வகுமார் உள்ளிட்ட கட்சியினர்,
மக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், 200க்கும் மேற்பட்ட தென்னை, மா,
வேம்பு மரக்கன்றுகளை வழங்கினர். நகர துணை செயலர் வைத்தி உள்பட பலர்
பங்கேற்றனர். அதேபோல் சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில், நகர செயலர்
அய்யப்பன் தலைமையில் கட்சியினர், மக்களுக்கு இனிப்பு வழங்கி
கொண்டாடினர்.
