/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் திருவிழா 'கத்தி' போட்டு வீரக்குமாரர்கள் ஊர்வலம்

ADDED : ஜன 15, 2025 12:57 AM
வீரபாண்டி,:தேவாங்க செட்டியார் சமூகத்தினரின் குல தெய்வமான ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு, தை முதல் நாளில் திருவிழா நடத்துகின்றனர். அதன்படி, 99ம் ஆண்டாக வேம்பாடிதாளம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா நேற்று நடந்தது. அதில், சக்தி அழைத்தல் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே மேள தாளம் முழங்க சென்றது. அப்போது வீரக்குமாரர்கள், 'கத்தி' போட்டுக்கொண்டு ஆடியபடி சென்றனர்.
தொடர்ந்து செங்கரும்புகளால் பந்தல் அமைத்து, வெற்றிலைகளால் தோரணம் கட்டி, வெல்ல கட்டிகளை அடுக்கி, அதன் நடுவே அம்மனை எழுந்தருள செய்து சிறப்பு பூஜை நடந்தது.
அதேபோல் இளம்பிள்ளையில் நடந்த சவுடேஸ்வரி அம்மன் திருவிழாவையொட்டி நடந்த 'சக்தி அழைத்தல்' ஊர்வலத்திலும், 'கத்தி' போட்டபடி ஏராளமான வீரக்குமாரர்கள், திரளான பெண்கள் பால்குடம் ஏந்தியும் ஊர்வலமாக வலம் வந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.