sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ராசிபுரம் போலீஸ் ஏட்டுவின் கணவர் ஏரியில் சடலமாக மீட்பு

/

ராசிபுரம் போலீஸ் ஏட்டுவின் கணவர் ஏரியில் சடலமாக மீட்பு

ராசிபுரம் போலீஸ் ஏட்டுவின் கணவர் ஏரியில் சடலமாக மீட்பு

ராசிபுரம் போலீஸ் ஏட்டுவின் கணவர் ஏரியில் சடலமாக மீட்பு


ADDED : ஜன 02, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் போலீஸ் ஏட்டுவின் கணவர், கோனேரிப்பட்டி ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப-டுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரி அருகே, நேற்று காலை, 'பஜாஜ் டிஸ்கவர்' டூவீலர் ஒன்று நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த மக்கள், வண்டி அருகே சென்று பார்த்தபோது, ஏரி தடுப்புச்சுவர் அருகே தண்-ணீரில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், இறந்தவர், நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பப்பட்-டியை சேர்ந்த ஈஸ்வரன், 46, என, தெரியவந்தது. இவர், சிங்க-ளாந்தபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணி-யாற்றி வந்துள்ளார்.

இவரது மனைவி பூங்கொடி, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். தம்பதிய-ருக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது, ராசிபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்ச்சுக்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அதன்பின், வீட்டிற்கு செல்ல-வில்லை. அவர், கோனேரிப்பட்டி ஏரியில் விழுந்து எப்படி இறந்தார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்-ளது.






      Dinamalar
      Follow us