ADDED : டிச 22, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறப்பு
தலைவாசல், டிச. 22-
கெங்கவல்லி தொகுதி, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், தலைவாசல் அருகே பட்டுத்துறையில், ரேஷன் கடை கட்டப்பட்டது. அந்த கட்டடத்தை நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி திறந்து வைத்தார். தொடர்ந்து வெல்கம் நகரில், 9.50 லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை; வேப்பநத்தம் ஊராட்சியில், 13.50 லட்சம் ரூபாயில் கழிவு நீர் கால்வாய் பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. அதில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, பட்டுத்துறை ஊராட்சி தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.