ADDED : ஜூலை 13, 2025 01:52 AM
சேலம், சேலம் மாவட்டம் பூலாவரியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 37. சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, 'டியோ' மொபட்டில், நெய்க்காரப்பட்டி, இளந்தோப்பு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த சைக்கிள் மீது, மொபட் மோதியது. மொபட்டில் இருந்து தடுமாறி விழுந்த மோகன்ராஜ் படுகாயம் அடைந்தார். மக்கள், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், இறந்தது தெரியவந்தது. சைக்கிளில் வந்தவரும் படுகாயம் அடைந்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விபரம் குறித்து, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி
அதேபோல் நாழிக்கல்பட்டியை சேர்ந்த, தறித்தொழிலாளி சித்தன், 72. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு கொண்டலாம்பட்டியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, 'டிஸ்கவர்' பைக் மோதியது. இதில் சித்தன் படுகாயம் அடைந்த நிலையில், மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவ
மனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.