/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 14, 2024 07:05 AM
சேலம் : தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
அதில் ரேஷன் கடைகளுக்கு புது விற்பனை முனையம் வழங்குதல்; பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை, அதன் அலுவலகத்தில் செலுத்தல்; உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாரிசு வேலை வழங்குதல்; பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் பணி ஒதுக்குதல்; அனைத்து நிதி பயன்களும், ஏ.டி.எம்., மூலம் பெற நடவடிக்கை தேவை உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு பணியாளர் சங்க மாநில தலைவி சுகமதி, துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட தலைவர் கார்த்திக், பொருளாளர் ராஜூ, விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

