/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜி.ஹெச்., பிரசவ வார்டில் எலிகள் உலா
/
ஜி.ஹெச்., பிரசவ வார்டில் எலிகள் உலா
ADDED : ஏப் 27, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் எலிகள் தொந்தரவு அதிகரித்துள்ளன. இதனால் சிகிச்சை பெறும் பெண்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
அங்கு உறவினர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை எலிகள் கடித்து, எடுத்து செல்வது தொடர்கிறது.
மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும், 'பேன்டேஜ்' உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகின்றன.
இந்த மருத்துவமனையில், உணவு பொருட்களை எலிகள் எடுத்துச் செல்லும் வீடியோ பரவி வருகிறது.
தலைமை மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி கூறுகையில், “எலிகள் உள்ளே செல்லாதபடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க, மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எலிகளை பிடிப்பதற்கான பணி நடக்கிறது,” என்றார்.

