/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்.பி.சாரதி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி 17வது தொடக்க விழா
/
ஆர்.பி.சாரதி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி 17வது தொடக்க விழா
ஆர்.பி.சாரதி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி 17வது தொடக்க விழா
ஆர்.பி.சாரதி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி 17வது தொடக்க விழா
ADDED : செப் 20, 2024 02:55 AM
சேலம்: சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி
யில் உள்ள, ஆர்.பி.சாரதி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில், 17வது தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அதில் எஸ்.ஆர்.சி., புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் விம லன் பரமசிவம், சென்னை ஜோஹோ கார்ப்பரேஷனின் தயாரிப்பு மேலாளர் ஸ்ரீகிருஷ்ணன் தண்டபாணி, மாணவர்களின் தொடக்கத்தை பாராட்டினர்.
கல்லுாரி தலைவர் நிதிஷ் ஹரிஹர், புது மாணவர்களை அறிமுகப்-படுத்தி, 'கிரேட் லேர்னிங் அகாடமி' மூலம், கல்லுாரியில் சேரும் முன் ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை முடித்த மாணவர்களை பாராட்டினார். செயலர் பிரபாகரன், மாணவர்கள் மேம்படுத்திக்-கொள்ள கல்லுாரி வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்-கொள்ள கேட்டுக்கொண்டார். முன்னதாக முதல்வர் முனுசாமி வரவேற்றார். இதில் இணை தலைவர் ஐஸ்வர்யா உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் அடுத்த, 10 ஆண்டுகளுக்கு, இக்கல்லுாரி ஏ.ஐ.சி.டி.இ., - அண்ணா பல்கலை தன்னாட்சி அந்தஸ்து பெற்-றுள்ளது என்றும், 'நாக்'கின், உயர்தர, ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்றும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.