ADDED : ஆக 12, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: நடுவனேரி ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அங்குள்ள பெருச்சாளி நத்தம், மாரியம்மன் கோவில் அருகே திருமண மண்டபம் கட்டப்பட்டது.அதற்கு போதிய வரவேற்பின்றி, 1998ல் பொது நுாலகமாக மாற்றப்பட்டது. ஆனால் ஒதுக்குப்புறமாக இருந்ததோடு பராமரிப்பு இல்லாததால் கதவு, ஜன்னல்களை சிலர் திருடிச்சென்றனர். 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கரையானுக்கு இரையாகின. சிலர் புத்தகங்களையும் திருடிச்சென்றனர். இந்நிலையில் நுாலக கட்டடமும் சேதம் அடைய, 2019ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.இதனால் போட்டி தேர்வுக்கு தயாராவோர், வாசகர்கள், வேம்படிதாளம் அல்லது இளம்பிள்ளை நுாலகத்துக்கு செல்லும் நிலை உள்ளதால், மீண்டும் நுாலகம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.