/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரியல் எஸ்டேட் பிரமுகர் 'வளைப்பு' 540 கிலோ புகையிலை பறிமுதல்
/
ரியல் எஸ்டேட் பிரமுகர் 'வளைப்பு' 540 கிலோ புகையிலை பறிமுதல்
ரியல் எஸ்டேட் பிரமுகர் 'வளைப்பு' 540 கிலோ புகையிலை பறிமுதல்
ரியல் எஸ்டேட் பிரமுகர் 'வளைப்பு' 540 கிலோ புகையிலை பறிமுதல்
ADDED : ஜூன் 04, 2025 01:58 AM
சேலம், சேலம், கருப்பூர் சுங்கச்சாவடியில் நேற்று, செவ்வாய்ப்பேட்டை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வந்த, சொகுசு காரை நிறுத்தும்படி, 'சைகை' காட்டியும் நிறுத்தப்படவில்லை. காரை பின் தொடர்ந்து சென்ற போலீசார், மதியம், 2:00 மணிக்கு, சேலம், 4 ரோட்டில் மடக்கினர். காரில் சோதனை செய்தபோது, புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.
காரை ஓட்டி வந்தவரை, ஸ்டேஷன் அழைத்துச்சென்று விசாரித்ததில், சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பூபதி, 40, என்பதும், டில்லி சென்று பழைய, 'பென்ஸ்' காரை வாங்கி, பதிவெண் இல்லாத நிலையில், 'பெங்களூரு பதிவு' என, ஸ்டிக்கர் ஒட்டி வந்ததும் தெரிந்தது. பெங்களூருவில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், 540 கிலோ புகையிலை வாங்கி, கடத்தி வந்ததும் தெரிந்தது. புகையிலை, காரை பறிமுதல் செய்த போலீசார், பூபதியை கைது செய்தனர்.