ADDED : மே 09, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், புதுப்பேட்டை சின்னசாமி ஐயா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், ரெட் கிராஸ் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ரெட்கிராஸ் கொடியை, சேர்மன் ஜோசப்தளியத் ஏற்றி வைத்து பேசுகையில், ''உலகில் போரில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ, 1919ல் சர்வதேச ரெட் கிராஸ் சொசைட்டி தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களின் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ஹென்றி துனாத் பிறந்த தினமான மே, 8 உலக ரெட் கிராஸ் சொசைட்டி தினமாக கடைபிடிக்கப்படுகிறது,'' என்றார்.
தொடர்ந்து ஆத்துார் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், 'பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், போதை பொருட்கள் பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, 500 பசுமை பைகளை, மக்களிடம் வழங்கினர்.
துணை சேர்மன் ஹபிப்உசேன், செயலர் ஜான்சுந்தர்ராஜ், பொருளாளர் அர்த்தனாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

