/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் நீர் திறப்பு 8,000 கன அடியாக குறைப்பு
/
மேட்டூர் நீர் திறப்பு 8,000 கன அடியாக குறைப்பு
ADDED : நவ 09, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், நவ. 9-
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கேற்ப, அணைக்கு நீர்வரத்து இருக்கும். நேற்று அணைக்கு நீர்வரத்து, 9,466 கனஅடியாக இருந்தது.
நீர்மட்டம், 106.60 அடி, நீர் இருப்பு, 73.66 டி.எம்.சி.,யாக இருந்தது. அதேநேரம் அணையில் இருந்து டெல்டா பாசன நீர் திறப்பு, வினாடிக்கு, 12,000 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை ௧௦,௦௦௦ கன அடியாகவும், மாலை, 8,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.